மிளகுத்தூள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக, நீரிழிவு பிரச்சினை குறைகிறது.
மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும்.
பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் நெஞ்சுச் சளிக் கட்டு நீங்கும்.
மிளகு தேநீர் குடிப்பது தொண்டைவலியைக் குறைக்கும். ஒரு கப் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி தேன், சிறிதளவு கருமிளகு சேர்த்து 15 நிமிடங்கள் கழித்து குடிக்கலாம்.
சூடான பாலில் மஞ்சளுடன் மிளகு சேர்த்துப் பருகுவது சளியைப் போக்கும். பால் மற்றும் மஞ்சளில் நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல பொருட்கள் உள்ளன.
எனவே நமது அன்றாட உணவில் மிளகைச் சேர்த்து உட்கொண்டு,பலன் பெறுவோம்.