இந்தப் படத்தின் படப்பிடிப்பு 95 சதவீதம் முடிவடைந்துவிட்ட நிலையில்,அஜித் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில்,ஏற்கனவே படக்குழு இரண்டுக்கும் மேற்பட்ட போஸ்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மிகவும் தீவிரமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் புதிய தோற்றத்தினைப் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில், "அசத்தலாக தோற்றம் அளிக்கும் அஜித்குமாரின் இந்த புகைப்படம் ஸ்பெயில் நடத்தப்பட்ட படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்டது.படம் கட்டாயம் பொங்கலுக்கு வெளியாகும் " எனத் தெரிவித்துள்ளார்.
இவரது இந்தப் பதிவு இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படக்குழு தற்போது வெளியிட்டுள்ள புதிய தோற்றத்தில் அஜித்குமார் கோலிவுட் படத்தின் வில்லனைப் போல் காட்சி அளிக்கின்றார் எனக் கூறி அவரது இரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.