பொதுவாக, வாரம் இருமுறை உடலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால் ஏற்படும் பலன்கள் குறித்து பாரம்பரிய மருத்துவம் கூறும் விளக்கங்களை அறிந்துகொள்வோம்.
உடலில் நல்லெண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வருவதால், உயர் இரத்த அழுத்தம் குறையும்.
தலையில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக முடி உதிர்தல், இளநரை, வழுக்கை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
எண்ணெய் குளியல் சிறந்த தீர்வாகக் காணப்படுகின்றது.
வாரம் ஒரு முறை அல்லது இரு முறை நல்லெண்ணெய் தேய்த்து அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் குளிக்க வேண்டும் என சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது.
ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் குளியல் எடுப்பது நல்லது.