இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’. நடிகை அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.
மேலும் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், மதுமிளா, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கண்டதும் காதல் கொள்ளும் ஹீரோவுக்கு அதைச் சொல்வதற்கு சில சிக்கல்கள். அடுத்து சில பிரச்சினைகள். அதிலிருந்து மீண்டு காதலர்கள் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதுதான் இத்திரைப்படத்தின் கதைக்களம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இத்திரைப்படம் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் திகதி வெளியாகவுள்ளது.