ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் october 10ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியான 'வேட்டையன்' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'மனசிலாயோ' மற்றும் 'ஹண்டர் வண்டார்' பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு அடுத்ததாக அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில், ஒரு நேர்காணலில் சில சுவாரசியமான தகவல்களை அனிருத் கூறியிருக்கிறார்.
அதாவது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார். இதனால் இரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் எனவும் கூறியுள்ளார்.