Sooriyan Gossip - 30 கோடி வரை ரோஹித் ஏலம் போவார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
110 Views
ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால், எத்தனை கோடிக்கு ஏலம் போவார் என்பது குறித்து ஹர்பஜன் சிங் கணித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங் - ‘‘ரோஹித்திற்கு தற்போது 37 வயதாகிறது. இருப்பினும், ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார். மேலும், தலைமைத்துவமும் அபாரமாக இருக்கிறது.
ஒருவேளை, ரோஹித் சர்மா ஏலத்தில் பங்கேற்றால், அவரை வாங்க 10 அணிகளும் போட்டி போடும். மும்பை இந்தியன்ஸ் முதற்கொண்டு. இருப்பினும், கிண்ணத்தை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் RCB மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு தலைவர் தேவை என்பதால், ரோஹித்தை வாங்க இரண்டு அணிகளும் 30 கோடி வரை போட்டி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.