காய்களில் கசப்பு என்றாலேயே நம் நினைவுக்கு வருவது பாகற்காய் தான்.
உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இயற்கைத் தரும் காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன்இலை,தண்டு என்பன உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியவை.
சிறிதளவு பாகற்காய் இலைகளுடன் கற்றாழையைச் சேர்த்து நன்கு அரைத்து கண்களைச் சுற்றிப் பூசி 20 நிமிடங்கள் கழித்துகழுவ வேண்டும். இவ்வாறு செய்வதனால் கண்பார்வை தொடர்பான குறைபாடுகள் நிவர்த்தியாகும்.
ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாற்றைக் கலந்து காலையில் வெறும் வயிற்றில்குடித்தால், மூன்று மாதங்களுக்குள் இரத்தம் சுத்தமாகி சருமம் பளபளப்பாகி விடும்.
பாகற்காய் இலையின் சாற்றுடன் பெருங்காயத் தூளைக் கலந்து நல்லெண்ணெயில் வதக்கி உட்கொண்டால் நீரிழிவு நோய்குணமாகும்.
எனவே சிறந்த மருத்துவத்தைத் தரும் பாகற்காய் இலையைப் பயன்படுத்திஆரோக்கியமாக வாழ்வோம்.