இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் மற்றும் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மோகன், சினேகா,யோகி பாபு, பிரேம்ஜி, மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்த திரைப்படம் தான் "THE GREATEST OF ALL TIME".
இத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா
இசையமைத்திருந்தார்.
"GOAT" திரைப்படம் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் குடும்பங்களாலும் கொண்டாடப்பட்டது. வசூல் ரீதியாகவும் படம் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றது.
இத்திரைப்படம் உலகளவில் 455 கோடி ரூபாயை வசூலித்தது,அதில் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
கடந்த 3 ஆம் திகதி விஜய்யின் "THE GREATEST OF ALL TIME" திரைப்படம் OTT தளத்தில் வெளியாகியிருந்தது.
"GOAT " திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளது.அர்ச்சனா மற்றும் விஜய் இணைந்து கேக் வெட்டும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.