மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்கிறது.
அந்த வகையில் PassWord பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இப்போது Passkeys அம்சத்தை ஆரம்பித்துள்ளது.
இதன்மூலம் சகலவிதமான App, Toolகளையும் PassWord இல்லாமல் FaceID அல்லது TouchID ஐ பயன்படுத்தி Open செய்யலாம். WhatsApp நிறுவனமும் Passkeys அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதனை எப்படி பயன்படுத்துவது?
WhatsApp இல் Passkeys ஐ பயன்படுத்த Settings ,Account , Passkeys பகுதிக்குச் செல்ல வேண்டும். பின் உங்கள் FaceID அல்லது TouchID ஐ பயன்படுத்தி WhatsApp கணக்கை அணுகவும்.
பின்னர் நீங்கள் Passkeys அம்சத்தை இலகுவாகப் பயன்படுத்தலாம்.