'தக் லைஃப்' திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா,ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் நிலையில் கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து இந்தத் திரைப்படத்தை தயாரிக்கின்றனர்.
தற்போது இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் கமல்ஹாசன் மூன்று மாதகால பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து வித்தியாசமான தோற்றத்தில் கமல்ஹாசன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப்
புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.