டெஸ்லா நிறுவனர் இலோன் மஸ்க் மனிதர்களுக்கு நண்பராக இருக்கும் வகையிலான ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.
இந்த ரோபோக்கள் வீட்டை சுத்தம் செய்வது, தோட்ட வேலைகள் செய்வது என அனைத்து வேலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இந்த மனித ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
இதுகுறித்து இலோன் மஸ்க் கூறுகையில், "இந்த மனித ரோபோக்களால் நாம் விரும்பும் அனைத்து வேலைகளையும் செய்ய முடியும். இவற்றால் பேச முடியும், நடனமாட முடியும், குழந்தைகளை கவனித்துக்கொள்ள முடியும்.
அவர்களுடன் விளையாட முடியும். நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்ல முடியும். மேலும் தோட்ட வேலைகள், வீட்டை சுத்தம் செய்தல், கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குதல் உள்ளிட்ட வேலைகளையும் செய்ய முடியும்.
சிறந்த நண்பனாக இருக்கும் இந்த ரோபோவின் விலை 20,000 முதல் 30,000 அமெரிக்க டொலர்கள் ஆகும்" என தெரிவித்துள்ளார்.