தரையில் படரும் கீரை வகைகளுள் சிறுபசலையும் ஒன்றாகும். இதற்கு தரை பசலை கீரை என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
பசலைக்கீரையில் மிக அதிக அளவில் விட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. அதிலும் விட்டமின் A மற்றும் C சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
சிறு பசலைக் கீரையைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.
சிறுநீரகம்,சிறுநீர்ப்பை மற்றும் அது சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட சிறு பசலைக் கீரை உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும் இது உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட, வாரம் ஒருமுறை சிறு பசலைக் கீரையை சமைத்துச் சாப்பிடுவது நல்லது.
சிறு பசலைக் கீரையை புற்று நோயாளிகள் சாப்பிட்டு வந்தால் புற்றுநோயில் இருந்து விரைவாகக் குணமாகலாம்.