இயக்குநர் விக்னேஷ் சிவன் "LIK" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதனும், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 Screen ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இப்படத்தில் S.J.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டிருக்கின்றன.
தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு Time Travel செய்யும் கதையை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் Single பாடலான 'தீமா', அனிருத் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது.
மூச்சுவிடாமல் அனிருத் ஒரு பெரிய சரணத்தைப் பாடியுள்ளார் என்பது தான் இந்தப் பாடலின் சிறப்பம்சமாகும்.
தற்போது வெளியாகியிருக்கும் ' LIK ' திரைப்படத்தின் 'தீமா' என்ற பாடல் இளம் இரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. பலரும் இதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.