Space X நிறுவனம் ஏவிய Rocket வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியதன் மூலம் விண்வெளி ஆய்வில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மஸ்கின் Space X நிறுவனம் Rocket இன் தயாரிப்புச் செலவைக் குறைக்கும் வகையில், மீண்டும் பூமிக்குத் திரும்பி வரும் Rocket ஐ தயாரித்து வருகிறது.
அதன்படி சோதனை முயற்சியாக Super Heavy booster எனும் Space X இன் Rocket ஐ அண்மையில்
ஏவியது. ஆனால் அந்த Rocket திட்டமிட்டபடி பூமிக்குத் திரும்பவில்லை.
இந்த நிலையில் மீண்டும் Space X நிறுவனம் தனது 5ஆவது Starship விண்கலத்தை சோதனை முயற்சியாக விண்ணில் ஏவியது.
இந்த விண்கலம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள Space X ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. விண்ணில் பாய்ந்த இரண்டரை நிமிடங்களில், விண்கலத்தில் இருந்த, Super Heavy booster Rocket திட்டமிட்டபடி அதிலிருந்து தனியாகப் பிரிந்தது.
பின்னர் துல்லியமான முறையில் புவியீர்ப்பு விசையை எதிர்த்து, Super Heavy booster Rocket வெற்றிகரமாக டெக்ஸாஸ் ஏவுதளத்திற்குத் திரும்பியது.
அதனை 'மெக்காஸில்லா' எனும் பாரிய Launchpad தனது 'Chopsticks' எனும் பிரம்மாண்ட கைகளால் Catch செய்தது. இது விண்வெளி ஆய்வில் பாரிய சாதனை ஆகும்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில், பலரும் Space X நிறுவனத்திற்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.