மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபல தகவல் பரிமாற்று செயலியான WhatsApp, குறைந்த ஒளி நிலைகளில் Video அழைப்புகளை மேம்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
பயனர்கள் குறைந்த ஒளி நிலைகளை Video அழைப்புகளில் பயன்படுத்தும் போது, சிறந்த Video தரத்தைப் பெறவும், குறைவான புள்ளிகளை (Grain-Free) எதிர்கொள்ளவும் அனுமதிக்கும்.
இந்தப் புதிய அம்சத்தைப் பெற , உங்களது Video அழைப்புகளின் போது திரையில் காணப்படும் விளக்கு (Bulb Icon) சின்னத்தை செயல்படுத்த வேண்டும்.
இந்த அம்சமானது IOS மற்றும் Android சாதனங்களில் கிடைக்கிறது. ஆனால் இவை இணையத்தள பயன்பாட்டில் கிடைப்பது இல்லை.
குறைந்த ஒளி நிலை புதுப்பிப்புகளுடன் தற்போது WhatsApp-இன் Chat Themes களும் அறிமுகமாகியுள்ளன.
இந்த அம்சம் பயனர்கள் பல்வேறு பின்னணி நிறங்களுடன் தங்கள் உரையாடல்களை மேற்கொள்ள அனுமதிக்கிறது.
ஆரம்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட Beta டெஸ்டர்களுக்கு கிடைத்தாலும், Chat Themes அம்சம் விரைவில் பரவலான பயனர்களுக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.