சர்க்கரைவள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக விட்டமின் A,B,C, பொட்டாசியம், மெக்னீசியம், நார்ச்சத்து, இரும்பு, கல்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
பொதுவாக கிழங்கில் கொழுப்பு அதிகம் நிறைந்து காணப்படும். ஆனால் சர்க்கரைவள்ளிக் கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இவை உடலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கின்றது. மேலும் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.
சர்க்கரைவள்ளிக்கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால், நமது சருமம் மென்மையாகக் காணப்படும்.
எனவே அன்றாடம் நமது உணவில் ஏதேனும் ஒரு முறையில் இந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கை சேர்த்து உட்கொண்டு, ஆரோக்கியத்தினை பலப்படுத்திக் கொள்வோம்.