Google Meet இல் சேர்க்கப்பட்டுள்ள ’New’ Button பயனர்களுக்கு புதிய அழைப்பை உருவாக்க, திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்களை எளிமையாக வழங்குகிறது.
Google அதன் Video App அம்சமான Google Meet இல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. இதில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட மற்றும் புதிய ’New’ Button ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட Call ஸ்கிரீனானது அழைப்புகளின்போது அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவிகளை நெறிப்படுத்திக் காட்டுகிறது. அதே சமயம் இந்த ’New’ Button யூசர்களுக்கு புதிய அழைப்பை உருவாக்க, திட்டமிட மற்றும் குழு அழைப்பை உருவாக்குவதற்கான விருப்பங்களை வழங்குகிறது.
'Take Notes For Me 'எனப்படும் ‘Gemini’ AI மூலம் இயங்கும் புதிய தொழில்நுட்ப அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த அம்சம் மீட்டிங்கின் போது பயனர்கள் இந்த App மூலம் Notesகளை எடுக்க உதவுகிறது.
இருப்பினும், Google Work Space வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே தற்போது இந்த அம்சம் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.