SooriyanFM Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
209 Views
WhatsApp உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய வசதிகளை WhatsApp அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அந்த வகையில் WhatsApp அண்மையில் அதன் Video Call வசதியில் Background, Filters வசதியை அறிமுகம் செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இப்பொழுது Low-light Video Calling வசதியை அறிமுகம் செய்துள்ளது. பயனர்களின் Video Calling வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Low-light Video Calling வசதி என்பது வெளிச்சம் இல்லாத வேளையிலும் சிறந்த தரத்தில் Video Call பேச அனுமதிக்கக்கூடிய வசதியாகும். இந்த வசதியை Activate செய்துகொள்வதன் மூலம் Light வெளிச்சத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
Low-light Video Calling வசதியை எவ்வாறு செயற்படுத்திக்கொள்வது என்பது பற்றி இப்பொழுது பார்ப்போம் : முதலில் WhatsApp இல் உங்களது நண்பர் அல்லது உறவினருக்கு Video Callஐ மேற்கொள்ளுங்கள். பின்னர் Video வசதியை Full Screenக்கு மாற்றிக்கொள்ளுங்கள். இப்பொழுது மேல் வலதுபுறத்தில் உள்ள Bulb போன்ற Iconஐ Click செய்துகொள்ள வேண்டும். இதனை Click செய்துகொள்வதன் மூலம் Low-light Video Calling வசதி Activate ஆகிவிடும்.