இதுவரை அனைவரும் பூசணிக்காயை உணவில் சேர்த்து வந்தோம். ஆனால் பூசணிக்காய் இலைகள் கூட நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகிறது.
பூசணிக்காய் இலைகள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அத்துடன் புற்றுநோயைத் தடுத்து நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது.
இந்தப் பூசணிக்காய் இலைகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளன. பூசணிக்காய் இலைகளை நாம் அன்றாட உணவில் ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொண்டால், அதிக உடல் எடையைக் குறைக்க முடியும்.
நீரிழிவு நோய், எலும்பு சார்ந்த பிரச்சினைகளுக்கு பூசணிக்காய் இலை அருமருந்தாகின்றது.
எனவே ஆரோக்கியத்தை அள்ளித்தரும் இந்தப் பூசணி இலையை நமது அன்றாட உணவில் சேர்த்து உட்கொண்டு பயன் பெறுவோம்.