ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கின் சாற்றுடன் சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால்,சருமம் மிருதுவாக மாறும்.
உருளைக்கிழங்கில் உள்ள பொட்டாசியம், சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
உருளைக்கிழங்கின் சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றைக் கலந்து முகப்பரு மற்றும் கருவளையம் உள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் அனைத்தும் மறையும்.
இரண்டு தேக்கரண்டி தேனுடன் உருளைக்கிழங்குச் சாற்றைக் கலந்து முகம் மற்றும் கழுத்து வரை தடவி 15 நிமிடங்கள் காய வைத்த பின்னர் கழுவ வேண்டும். இது எமது சருமத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள முறையின் படி வாரத்திற்கு மூன்று முறையாவது இயற்கையான முறையில் உருளைக்கிழங்கின் சாற்றைப் பயன்படுத்தி உங்களது அழகை மெருகூட்டிக் கொள்ளுங்கள்.