எமது உடல் ஆரோக்கியத்தை அதிகரித்துக் கொள்ள உதவும் இயற்கையான பொருட்களில் வெந்தயமும் ஒன்றாகும். எனவே வெந்தயத்தின் மூலமாகக் கிடைக்கும் நன்மைகளை இந்தப் பதிவில் அறிந்துகொள்வோம்.
தலைமுடி வளர்ச்சியில் வெந்தயத்தின் பங்கு முக்கியமானது. அதில் உள்ள எண்ணெய் பசை முடி வளர்ச்சிக்கு உதவுவதால் தலைக்குத் தேய்க்கும் எண்ணெய் தயாரிப்பில் வெந்தயமும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது முடி உதிர்தலைத் தடுக்கிறது.
வெந்தய எண்ணெயில் இருந்து வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. இது அதிக நறுமணத்தையும், கிருமிகளை அழிக்கும் சக்தியையும் கொண்டுள்ளது.
சிறுநீரகம் சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள், வெந்தயத்தை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடலைக் குளிர்மையாக வைத்துக்கொள்வதுடன் உடல் வறட்சியை நீக்கி சிறுநீரகங்களைப் பாதுகாக்கின்றது.
எனவே சிறந்த ஆரோக்கியத்தைத் தரும் வெந்தயத்தை நமது அன்றாட உணவில் சேர்த்து பலன் பெறுவோம்.