தமிழ் சினிமாவில் நல்ல Commercial திரைப்படங்களைக் கொடுப்பவர் இயக்குநர் சுந்தர் சி. தமிழில் நகைச்சுவைப் பேய்த் திரைப்படங்களின் வரிசையை ஆரம்பித்து வைத்த இவர், கடந்த 2014 இல் இயக்கிய 'அரண்மனை' திரைப்படம் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக 'அரண்மனை 2 ', 'அரண்மனை 3 ' மற்றும் 'அரண்மனை 4 ' ஆகிய நான்கு திரைப்படங்களைக் கொடுத்தார். மேலும் இவர் தற்போது வடிவேலுவை வைத்து ‘கேங்கர்ஸ்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து, 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார்.
இந்தநிலையில் 'அரண்மனை 5 ' திரைப்படத்திற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டதாகவும் இத்திரைப்படத்திற்கு ஹிப் ஹொப் தமிழா ஆதி இசையமைக்கவுள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.