லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. இத்திரைப்படத்தில் நடிகர்களான கார்த்தி மற்றும் நரேன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பின்புதான், லோகேஷ் கனகராஜ் தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.
'கைதி' திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது X தளப் பக்கத்தில் ஒரு பதிவையிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் , "எல்லாம் இங்கிருந்துதான் தொடங்கியது- கார்த்தி மற்றும் S. R. பிரபு இருவருக்கும் நன்றி. இவர்களால் தான் 'Lokesh Universe' சாத்தியமானது. விரைவில் டில்லி திரும்ப வருவார்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவின் மூலம் 'கைதி' இரண்டாம் பாகத்தை லோகேஷ் கனகராஜ் விரைவில் இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.