Gossip Sooriyan Fm - புனே மைதானத்தில் தடுமாறும் ரோஹித்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
57 Views
டெஸ்ட் போட்டிகளில் புனே மைதானத்தில் 11 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா ஒருமுறை கூட அரைச்சதம் அடிக்காமல் தடுமாறி வருகிறார். புனே மைதானத்தை பொறுத்தவரை இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு இதுவரை கொஞ்சம் கூட ராசியாக இருந்தது கிடையாது.
ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் ரோஹித் ஓட்டம் ஏதும் பெறாமல் வெளியேறினார். அத்தோடு இரண்டாவது இன்னிங்ஸில் 8 ஓட்டங்களோடு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலமாக புனே மைதானத்தில் நடந்த போட்டிகளில் தொடர்ச்சியாக 11 இன்னிங்ஸ்களில் ஒரு அரைச்சதம் கூட அடிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
அடிலெய்ட் மைதானத்திற்கு பின் இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு புனே மைதானம் தான் அதிக சோதனையைக் கொடுத்துள்ளது.