தவிட்டுக்கொய்யாப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் புரதம், விட்டமின் C, B, கல்சியம், இரும்பு, மக்னீசியம் போன்றசத்துக்கள் நிறைந்துள்ளன.
இந்த தவிட்டுக்கொய்யாப் பழம் இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகின்றது. குறிப்பாக இதன் இலையின்சாறு இரத்த சர்க்கரை அளவை சீராகப் பேண உதவுகிறது.
இந்தப் பழத்தைப் போன்று இதன் இலையிலும் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. தவிட்டுக்கொய்யாப் பழத்தின் இலை, புற்று நோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது.
தவிட்டுக்கொய்யாப் பழம் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். எனவே தினமும் இந்தப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் குடல்இயக்கத்தை ஊக்குவிக்கலாம். மேலும் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
எனவே வாரம் இருமுறையாவது இந்தப் பழத்தை உட்கொண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்.