நெல்சன் இயக்கத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு,விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
ஜெயிலர் திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இதனையடுத்து நெல்சன் ஜெயிலர் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார்.ஏற்கனவே வெளியான தகவலின்படி 'ஜெயிலர் 2' திரைப்படத்திற்கு "ஹுக்கும்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளடி பெக்கர்' திரைப்படத்தை நெல்சன் தயாரித்ததன் மூலமாக இவர் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
இந்தப் படம் வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரத் தயாராகி வருகிறது.
அதன்படி இப்படத்தின் வெளியீட்டுப் பணிகளில் கலந்து கொண்ட நெல்சன்,
"எனது அடுத்த படம் ஜெயிலர் 2 படம் தான்" என்று தெரிவித்துள்ளார்.எனவே ரஜினி, தனது 171ஆவது படமான 'கூலி' திரைப்படத்தை முடித்த பின்பு நெல்சன், ரஜினி கூட்டணியில்
'ஜெயிலர் 2' திரைப்படம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.