இந்தியாவின் பெங்களூரு விளையாட்டரங்கில் நடைபெற்ற 13ஆவது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப்புக்கான முதலாவது அரை இறுதிப்போட்டியில், ஹொங்கொங்கை எதிர்த்தாடிய இலங்கை 71 - 47 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியீட்டியது.
இலங்கை சார்பாக திசலா அல்கம 57 முயற்சிகளில் 54 புள்ளிகளையும் ரஷ்மி பெரேரா 22 முயற்சிகளில் 17 புள்ளிகளையும் பெற்றுக்கொடுத்தனர்.
இதன் மூலம் தோல்வி அடையாத அணியாக ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் முன்னாள் சம்பியன் சிங்கப்பூரை நாளை இரவு இலங்கை எதிர்த்தாடவுள்ளது.
இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் மலேசியாவை 54 - 46 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிகொண்ட சிங்கப்பூர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.