மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக சுராஜ் வெஞ்சரமூடு வலம் வருகின்றார். இவர் தற்பொழுது சீயான் விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதுவே இவர் நடிக்கும் முதல் தமிழ் திரைப்படமாகும்.
இந்நிலையில் மலையாள இயக்குநரான முகமத் முஸ்தஃபா இயக்கத்தில் 'முரா' திரைப்படம் உருவாகியுள்ளது.இப்படம் ஒரு Gangster Drama கதைக்களத்தில் உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஹ்ரிது ஹரூன் , மாலா பார்வதி, கனி கஸ்தூரி, கண்ணன் நாயர்,ஜோபின் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அண்மையில் இத் திரைப்படத்தின் Teaser வெளியாகி மக்களின் கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில் திரைப்படத்தின் Trailer ஐ நடிகர் விஜய் சேதுபதியும்,S.J.சூர்யாவும் தத்தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் .