கறுப்பு சப்போட்டாப் பழம் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பழம் ஆகும். இப்பழம் மத்திய அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படும்.
இந்தப் பழங்கள் பார்ப்பதற்கு Chocolate போலவே இருப்பதால் இதற்கு ‘Chocolate Pudding ’ என்று இன்னுமொரு பெயரும் இருக்கிறது. இதன் சுவையும் Chocolate போலவே இருக்குமாம்.
இந்தப் பழம் சாப்பிடுவதால், பல நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் அதிகளவில் உள்ளன.
கறுப்பு சப்போட்டாப் பழம் சாப்பிடுவதன் மூலம் இரத்த அழுத்தப் பிரச்சனையிலிருந்து பாதுகாக்கலாம்.
இப்பழம் சிறுநீரகம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. சளிப் பிரச்சினை உள்ளவர்கள் கறுப்பு சப்போட்டாப் பழத்தைச் சாப்பிடுவது நல்லது.
கறுப்பு சப்போட்டாப் பழத்தை அதிகளவாக உட்கொண்டால் தொண்டையில் அரிப்பு அல்லது வாயில் புண் ஏற்படலாம் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
ஒருவருக்கு நீரிழிவுப் பிரச்சினை இருந்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், உடலில் இரத்தத்தின் சீனியின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.