தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி, திரைக்கு வரத் தயாராக இருக்கும் திரைப்படம் தான் 'கேம் சேஞ்சர்'.
இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிப்பதுடன் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் தமனின் இசையில் தயாரிப்பாளர் தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை டிசம்பர் 20ஆம் திகதி வெளியிடுவதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. அதன்பின் சில காரணங்களால் இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி திரைக்கு வரவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக 'இன்னும் 75 நாட்கள் உள்ளன' என்று குறிக்கப்பட்ட போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரானது இணையத்தில் வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அதில் 'கேம் சேஞ்சர்' திரைப்படத்திற்கான டீசர் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.