தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. 'ஜெயம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இவர் தற்போது இயக்குநர் ராஜேஷ் இயக்கும் 'பிரதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். கலகலப்பான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இந்தத் திரைப் படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ளார்.இவர்களுடன் நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்
ஹரில் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது.
அக்கா - தம்பி உறவை அடிப்படையாக்க் கொண்டு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் Teaser மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி வைரலானது.'பிரதர்' படத்துக்கு தணிக்கைக்குழு (U) சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்தநிலையில், தற்போது இப்படத்தின் Trailer வெளியாகி உள்ளது.