சிலருக்கு உடலில் ஊட்டச்சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறன. இத்தகைய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள், வெள்ளைப்பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.
பூண்டு பல தொற்றுகளில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதுடன் பல நாட்பட்ட நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது. மேலும் பூண்டு வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது. பண்டைய கலாசாரங்களில், பூண்டு சோர்வைக் குறைக்கவும், தொழிலாளர்களின் வேலைத்திறனை அதிகரிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
பூண்டு செரிமானத்தை மேம்படுத்தி, உடல் ஆரோக்கியத்தைப் பலமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.