ககன்யான், சந்திரயான்- 4 திகதிகளை அறிவித்த இஸ்ரோ !
sooriyanfm goosip - ககன்யான், சந்திரயான்- 4 திகதிகளை அறிவித்த இஸ்ரோ !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
ககன்யான் திட்டம் இந்தியாவின் இலட்சியத் திட்டங்களில் ஒன்றாகும். ககன்யான் திட்டம் மூலம், இந்தியா முதல் முறையாக மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இது இந்தியாவின் முதல் குழு விண்வெளிப் பயணமாகும். (crewed Indian space mission) அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத், ககன்யான், சந்திரயான்- 4 திட்டத்திற்கான உத்தேச திகதியை அறிவித்தார்.
மனித விண்வெளிப் பயணத் திட்டம் ககன்யான் 2026 இல் இருக்கலாம். நிலவுக்குச் செல்லும் திட்டம் சந்திரயான்-4 2028 இல் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.
இஸ்ரோ- ஜப்பான் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவுடன் இணைந்து மேற்கொள்ளும் திட்டம் சந்திரயான்-5 திட்டமாக இருக்கலாம் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு லூபெக்ஸ் அல்லது Lunar Polar Exploration எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான திகதியை அவர் சரியாகக் கூறவில்லை. சந்திரயான்-5 என்பதால் சந்திரயான் -4 திட்டமிடப்பட்ட 2028 ற்குப் பின்னர் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லூபெக்ஸ் பற்றி பேசிய அவர், "இது மிகவும் கடினமான மிஷனாக இருக்கும். இந்தத் திட்டத்தில் லேண்டர் இந்தியாவால் வழங்கப்படும்.
அதேநேரத்தில் ரோவர் ஜப்பானில் இருந்து வரும். சந்திரயான்-3 இல் இருந்த ரோவர் எடை வெறும் 27 Kg மட்டுமே.
ஆனால், இந்தத் திட்டத்தில் 350 Kg எடையுள்ள ரோவரை சுமந்து செல்லும். இது ஒரு விஞ்ஞானப் பணியாகும். இது சந்திரனில் மனிதர்களைத் தரையிறக்கும் திட்டத்திற்கு ஒரு படி நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லும்" என்று அவர் கூறியுள்ளார்.