முகம் என்ன தான் அழகாக இருந்தாலும்,முகத்தின் அழகை எடுத்து காட்ட உதவுவது அழகிய உதடுகள் தான்.சுற்றுச்சூழலில் உள்ள மாசு,பருவநிலை மாறுபாடு,இரசாயனங்களின் பயன்பாடு, உடலில் நீர்ச்சத்து குறைவது போன்ற பல்வேறு காரணங்களால் உதடுகள் வறட்சியடையும்.
சிலருக்கு பனிக்காலத்தில் உதடுகள் கருப்பாக மாறி வறண்டு இருக்கும். இது ஒரு சில ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் சில பழக்கங்களால் ஏற்படுகிறது. உங்களது வறண்ட உதட்டை பாதுகாப்பது எப்படி என்று பார்போம்.
பனிக்காலத்தில் நாள்தோறும் உதடுகளின் மேல் வெண்ணெய் தடவி வந்தால் வறண்ட உதடுகள் மாறி அழகான உதட்டினை பெற்றுக்கொள்ளலாம்.
கொத்தமல்லி இலைகளின் சாற்றை எடுத்து தினமும் இரவு நித்திரைக்கு செல்லும் முன் உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாகும்.
தேங்காய் எண்ணெயில் அரை தேக்கரண்டி சாதிக்காய் பொடியைச் சேர்த்து குழைத்து உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் சிவந்து, பளபளப்பாக காட்சியளிக்கும்.வெடிப்புகள் வருவது குறைவடையும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் ரோஜா இதழ் போல மென்மையாக மாறும்.
உதடுகளை ஆரோக்கியமாகவும், மென்மையாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க அவற்றில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்க வேண்டும்.இதற்கு எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு சீனி சேர்த்து நன்கு கலந்து உதட்டில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும்.
சிறிதளவு கொக்கோ,வெண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து உதட்டில் பூசவும். இது கடினமான உதட்டின் தோலை மென்மையாக்கி, உதடுகள் வறட்சி அடைவதைத் தடுக்கும்.
எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கை வழிமுறைகளை வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து பின்பற்றி வந்தால் மென்மையான உதட்டினை பெற்றுக்கொள்ளலாம்.