சருமத்திற்கு நல்ல ஊட்டத்தை வழங்கும் உணவுப் பொருட்களில் ஒன்று முட்டையின் வெள்ளைக்கரு. இதற்கு முட்டையில் உள்ள புரோட்டின் தான் காரணம். இந்த புரோட்டின் நல்ல Moisturizer ஆக செயற்படுகின்றது. சருமத்தை மென்மையாக்கவும், சருமத்தில் உள்ள கருமையைப் போக்கவும் முட்டையின் வெள்ளைக்கரு பெரிதும் உதவுகின்றது.
முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் சிறிது தக்காளிச் சாறு மற்றும் 1 தேக்கரண்டி முல்தானி மெட்டி பொடியை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் சருமத்தின் கருமை நீங்கி சருமம் பொலிவாகக் காணப்படும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவுடன் வெள்ளரிக்காய் சாறு, கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சருமத்தில் தடவி காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
முட்டையின் வெள்ளைக்கருவுடன் சிறிது கடலைமாவு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து சருமத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தைப் பொலிவாக வைத்துக்கொள்ளும்.