கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ’அமரன்’.
மறைந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத்திரைப்படம் உருவாகியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதேவேளை இத்திரைப்படம் வெளியான முதல் நாள் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ. 42.3 கோடி வசூல் செய்துள்ளது என தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.