தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் Bollywood
சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருபவர் நடிகர் மாதவன்.
அந்த வகையில் மாதவன் கடைசியாக சைத்தான் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
சைத்தான் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. மாதவன் தமிழில் ஏற்கனவே டெஸ்ட் உள்ளிட்ட
படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது அதிர்ஷ்டசாலி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
தனுஷ் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்களான திருச்சிற்றம்பலம், உத்தம புத்திரன் மற்றும் யாரடி நீ மோகினி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ள இயக்குநர் மித்ரன் ஜவஹர் அதிர்ஷ்டசாலி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இயக்குநர் மித்ரன் ஜவஹரோடு மாதவன் இணைவது இதுவே முதல்முறையாகும்.
இதுக்குறித்து வெளியான போஸ்டரில் மாதவன் தான் ஒரு சாதாரண இருசக்கர வாகனத்தில் இருந்து பெரிய சொகுசு ரக காரை வாங்குவதற்கான வளர்ச்சியை பார்ப்பதுபோல் Firstlook அமைந்துள்ளது.
அதிர்ஷ்டசாலி படத்தின் கதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அதிர்ஷ்டசாலி திரைப்படம் பிரபல தொழிலதிபரான ஜி.டி நாயுடுவின் வாழ்க்கைக் கதையைத் தழுவி உருவாகும் திரைப்படமாகும்.
இப்படத்தில் சஹர்மிலா மண்ட்ரே, ராதிகா சரத்குமார், மடோனா செபஸ்டியன், சாய் தன்ஷிகா மற்றும் ஜகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.