இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப் 2023 - 2025 தொடரான இந்தத் தொடர் அடுத்த வருடம் ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி 2025 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து பெப்ரவரி 2ஆம் திகதிவரையும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 6ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முடித்துக்கொண்ட பின்னர் அவுஸ்திரேலிய அணி ஜனவரி 20ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
இலங்கை அணி அண்மையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 0 என்ற கணக்கில் வென்றுருந்தமை குறிப்பிடத்தக்கது.