YouTube நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Shopping இணைப்புத் திட்டத்தை (Shopping Affiliate Program) அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் பிரபல நிறுவனங்களின் பொருட்களை, YouTube உள்ளே நின்று Creators தங்களின் வீடியோக்களில், Shorts மற்றும் live streams-இல் விளம்பரம் செய்து பணம் சம்பாதிக்க முடியும்.
இத்திட்டம் மூலம் பயனர்கள் தங்களுக்குப் பிரியமான YouTubers பரிந்துரைக்கும் பொருட்களை நேரடியாக வாங்க முடியும்.
YouTube-இல் Creators மூலம் ஒரு தயாரிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்தப் பொருட்களை ஆராய்வதில் வாடிக்கையாளர்களின் ஈர்ப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
YouTube Studio வில் தகுதியான Creators-க்கு அனுமதி அளிக்கப்படுகிறது, மேலும் வீடியோவில் பொருட்களை Tag செய்து விளம்பரம் செய்வது எளிதாகிறது.