உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாட உணவில் காய்கறிகளையும் பழங்களையும் தினமும் சாப்பிட வேண்டும்.
அதிலும் மாதுளம் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் சார்ந்த பிரச்சினைகள் பலவற்றைத் தவிர்க்க முடியும்.
மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் அதிகளவான சக்தி கிடைக்கும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடும் திறன் மாதுளைக்கு உண்டு.
நீரிழிவு, இதயநோய் மற்றும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, யாராக இருந்தாலும் மாதுளம்பழத்தை உண்ணலாம்.
மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.