"Thug Life" திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ள நிலையில், "Thug Life" படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.
அந்தவகையில் கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7 திகதி அன்று "Thug Life" திரைப்படக்குழு ஒரு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட இருப்பதாக தற்பொழுது அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு கமல் இரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.