இயக்குநர் லோகேஷ் கனகராஜின் அடுத்த தயாரிப்பாக 'பென்ஸ்' திரைப்படம் உருவாகி வருகிறது.இந்தத் திரைப்படத்தில் ராகவா லோரன்ஸ் கதாநாயகனாக நடிக்கின்றார்.
இந்தத் திரைப்படம் கைதி, டில்லி, விக்ரம், லியோ உள்ளிட்ட கதாபாத்திரங்களுடன் இந்த 'பென்ஸ்' கதாபாத்திரமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தின் மீது இரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. 'கட்சி சேர' மற்றும் 'ஆசை கூட 'போன்ற பாடல்களை இசையமைத்து, பாடியவர் 'சாய் அப்யங்கர்'. இவர் இசையமைத்த இரண்டு பாடல்களும் வைரலானது.
இந்த நிலையிலேயே இந்தத் திரைப்படத்திற்கு 'சாய் அப்யங்கர்' இசையமைக்கவுள்ளார்.இதுக்குறித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.