சொக்லேட் என்ற பெயரைச் சொன்னாலே குழந்தைகள் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.அதற்கு முக்கிய காரணம் அதனுடைய இனிப்புச் சுவைதான்.
இதன்காரணமாகவே சிறியவர்கள் முதல் இளம் வயதினர் வரை சொக்லேட் மீதான மோகம் இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக டார்க் சொக்லேட்கள் பல நன்மைகளைக் கொண்டது.
டார்க் சொக்லேட்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியுடன் வைக்கும் தன்மை வாய்ந்தவை. மேலும் இரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. அத்துடன் இரத்தத் தட்டுகள் கொத்தாக சேராமல் பாதுகாப்பதுடன், இரத்தம் உறைவதையும் தவிர்க்கின்றது.
டார்க் சொக்லேட் சாப்பிடுவதால் உங்கள் தோலில் ஆபத்தான புற ஊதாக் கதிர்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றன. அதுமட்டுமன்றி இது ஒரு அருமையான மன அழுத்த நிவாரணியாகும்.
ஆனாலும் இதனை அளவோடு உண்பது நல்லது.