நடிகர், இயக்குநர், பாடகர், நடனக்கலைஞர், சண்டைப் பயிற்சியாளர், என தனது 5 வயதில் இருந்து திரையுலகிற்கு பங்களித்து வரும் பெரும் கலைஞரான கமல்ஹாசனின் பிறந்தநாளை,இன்று உலகம் முழுக்க இருக்கும் அவரது இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி "தக் லைஃப்" திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதியை ஒரு Teaser மூலம் படக்குழு தற்போது வெளியிட்டு,அடுத்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் திகதி படம் திரைக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த புதிய அறிவிப்பு கமல்ஹாசனின் இரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.