உலகில் திடீரென புதிய வைரஸ்கள் பரவத் தொடங்குகின்றன. இப்போது Necro Trojan என்ற புதிய வைரஸ் பரவி வருகிறது.
உலகெங்கும் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான செல்போன்கள் இந்தப் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
உலகெங்கும் உள்ள சுமார் 1.10 கோடி Android செல்போன்கள் Necro Trojan என்ற வகை வைரஸின் புதிய வேரியண்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வைரஸை Cyber Security நிறுவனமான Kaspersky தான் முதலில் கண்டுபிடித்தது. இதையடுத்து Google Play Store இல் உள்ள பிரபலமான Game மற்றும் Appளை Develop செய்த நிறுவனத்திற்கு இந்த Virus குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Play Store இல் போலி வெர்ஷன்களை நாம் Download செய்தால், இந்த Virus உங்கள் மொபைலிலும் வந்துவிடும்.
ஒருமுறை நமது மொபைலுக்குள் வைரஸ் வந்துவிட்டால், நமக்குத் தெரியாத பல மாற்றங்களை நமது மொபைலில் செய்துவிடும். நமது வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட பல தகவல்களை இது திருடிவிடுகிறதாம்.