சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்தத் திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படம் 38 மொழிகளில் 3D முறையில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்தத் திரைப்படத்தின் Trailer சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இத்திரைப்படம் இம்மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சென்னையில் நடைபெற்றது. வட இந்தியாவில் 3500 ற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் வெளியாகவுள்ளது.
திரைப்படத்தின் Promotion பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில் படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்த காணொளி, இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு காணொளி ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
கங்குவா திரைப்படம் 2 மணிநேரம் 34 நிமிடங்கள் ஒளிபரப்பாகவுள்ளதுடன், இத்திரைப்படம் U/A
தரச்சான்றிதழைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.