தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய்யின் அரசியல் பயணம் உறுதியானதையடுத்து, அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் 'தளபதி 69' திரைப்படம் தான் அவருடைய இறுதித் திரைப்படமாகும்.
ஆகவே, இவரை இறுதியாக சினிமா நட்சத்திரமாகத் திரையரங்குகளில் கண்டு களிக்க வேண்டும் என்று தமிழ் சினிமா இரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனாலேயே 'தளபதி 69' திரைப்படத்திற்கான வியாபாரம் தற்பொழுதே ஆரம்பித்துவிட்டது.
படப்பிடிப்பு இடம்பெற்று 15 நாட்களே முடிவடைந்த நிலையில் வெளிநாட்டுத் திரையரங்க உரிமையை 'Phars Films' நிறுவனமானது மிகப் பெரிய தொகைக்கு வாங்கியிருக்கிறது. அடுத்ததாகத் தமிழ்நாட்டுத் திரையரங்க உரிமைக்கு மிகப்பெரிய போட்டி நிலவி வருகிறது.
இத் திரைப்படத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய் வரை விலை பேசப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்குத் தயாரிப்பாளர் லலித் குமார் உள்ளிட்ட பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் 'தளபதி 69' திரைப்படத்திற்கான தமிழ்நாட்டுத் திரையரங்க உரிமையை கைப்பற்றுவதற்கு போட்டி போட்டு வருகின்றன.
இருப்பினும் இவ் உரிமையானது மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் லலித் குமாருக்கே கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தமிழ் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இவர் தளபதி விஜய்க்கு நெருக்கமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.