உலகின் மிகவும் பிரபலமான தகவல் பரிமாற்று செயலியான WhatsApp, தங்களது வாடிக்கையாளர்களுக்கான அம்சங்களை அடிக்கடி மேம்படுத்தி வருகிறது.
அந்த வகையில் புதிய அப்டேட்டாக Instagram-இருந்து ஈர்க்கப்பட்ட "ஸ்டேட்டஸில் குறிப்பிடு" (Mention in Status) அம்சம் WhatsApp இல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய அம்சம், பயனர்கள் தங்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் குறிப்பிடும்போது குறிப்பிட்ட தொடர்புகளுக்கு நேரடியாக அறிவிப்பை அனுப்ப அனுமதிக்கும்.
நீங்கள் உங்கள் WhatsApp ஸ்டேட்டஸில் ஒருவரைக் குறிப்பிடும்போது, அவர்கள் Instagram அறிவிப்புகள் செயல்படுவது போல ஒரு அறிவிப்பைப் பெறுவார்கள்.
இது அதிக ஈடுபாடு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்டேட்டஸ் அப்டேட்களை செயல்படுத்தும்.
இந்த அம்சத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்படவில்லை என்றாலும், அது விரைவில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.