பிரபுதேவா பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் தற்பொழுது இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை திரைப்படமான 'ஜாலியோ ஜிம்கானா' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக மடோனா செபஸ்டியன் நடித்துள்ளார். இவருடன் அபிராமி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரோபோ சங்கர், சாய் தீனா, யாஷிகா
ஆனந்த் மற்றும் மதுசுதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் திரைப்படத்தின் First Look சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்தத் திரைப்படம் இம்மாதம் நவம்பர் 22 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இடம்பெறும் 'ஊசி ரோசி' என்ற பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.
இந்தப் பாடலை ஆர்யா மற்றும் பிரியா ஆனந்த் அவர்களது எக்ஸ் தளத்தில் வெளியிடவுள்ளனர். இப்பாடலை ஜி.வி பிரகாஷ்குமார் பாடியுள்ளார். படத்திற்கு தணிக்கைக் குழு U சான்றிதழை வழங்கியுள்ளது என்பது குறிப்படத்தக்கது.