இயற்கையாகவே நமது தலை முடி மற்றும் சருமம் பொலிவோடு இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவோம். ஆனால் முகத்தில் தோன்றும் சிறு குறைபாடுகள் கூட அழகை குறைத்துக் காட்டும்.
குறிப்பாக முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள், கழுத்தில் கருமை,கரு வளையம், இவை அனைத்தும் வருவதை உணர்ந்ததும் அவை மேலும் வராமல் தடுக்க முயற்சிக்க வேண்டும். எனவே இயற்கை முறையில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
அரிசி மாவை தண்ணீர் விட்டு கிரீம் போல் கலக்கி முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வர கரும்புள்ளிகள் மறையும். அத்துடன் காலையில் உளுந்துப் பருப்பை முகத்திற்கு தேவையான அளவு எடுத்து அதனை பாலில் கலந்து ஊறவைத்து விட வேண்டும். பிறகு மாலையில் அதனை நன்கு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் நீங்கும்.
இலுப்பை இலையை மைபோல் அரைத்து இரவில் பூசி காலையில் கழுவி வர கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும். அதேபோல் ஜாதிக்காயை அரைத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவி வர கரும்புள்ளிகள் மறையும்.உருளைக் கிழங்கை வெட்டி கரும்புள்ளிகள் மீது தேய்த்து வர கரும்புள்ளிகள் மறையும்.